New year offer 2017

கனடா செய்திகள்

இந்தோனேசிய சுனாமி தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

10/02/2018

இந்தோனேசியா ஆழிப்பேரலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையுடன் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆழிப்பேரலை தொடர்பான மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பலு கடற்கரை நகரத்தை ஆழிப்பேரலை தாக்கிய போது அங்கு கடற்கரை திருவிழா ஒன்று இடம்பெற்றதாகவும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் பலியாகியுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரையில் 832 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர நில அதிர்வு தாக்கிய மேலும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளை துரித கதியில் அகற்றக்கூடிய இயந்திர சாதனங்களை அந்த இடத்திற்கு கொண்டுச் செல்வதில் மீட்பு பணியாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பலு நகரத்திற்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறிப்பாக முற்றாக அழிந்து போயுள்ள அடுக்கு மாடிகள் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.