New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

10/02/2018

அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒளியியல் சாமணம் மற்றும் உயிரியல்” அமைப்புகளுக்கு தொடர்பான ஆராய்ச்சியில் பெரும் பங்களிப்பு அளித்ததன் காரணமாக ஆர்தர் அஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேப்போல் ஜெரார்டு மௌரோ மற்றும் டோன்னா ஸ்ரிக்லாண்ட் ஆகியோரின் “அதிக தீவிரம், தீவிர குறுகிய ஒளியியல் பருப்புகளை உருவாக்குவதற்கான இன்றியமைய முறைமைக்காக” நோபல் பரிசு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.