கனடா செய்திகள்
கனடாவில் காணாமல் போன இளம் பெண் ஒருவரின் உடல் சடலமாக மீட்பு
10/03/2018கனடாவில் காணாமல் போன இளம் பெண் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது தந்தை கூறிய வார்த்தைகள் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.
கனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் 33- வயது நிறைந்த மேரி மடேலின் எல்லோவ்பக் என்பவர்.
ஆறு குழந்தைகளுக்கு தாயான இவர் தீராத உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவப் பரிசோதனைக்காக Winnipeg வந்திருந்தார்.
அங்கு அருகில் அமைத்துள்ள ஹோட்டலில் தங்கி சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென மாயமானார்.
இதையடுத்து,வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரது புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், Winnipeg-கிலுள்ள ஒரு ரீசைக்ளிங் டெப்போ ஒன்றில் மடேலின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது தந்தை கூறும்போது, தனது மகள் இப்படி திடீரென காணாமல் போவாள் என்று நான் எண்ணியதில்லை. இருப்பினும் அவளது உடலாவது எனக்கு திருப்பி கிடைத்ததற்கு தான் மிகவும் மனா நிறைவுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், Winnipeg-ல் இது வரை பல பெண்கள் காணாமல் போயியுள்ளனர். அதனால், இன்று வரை பல பெற்றோர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.