New year offer 2017

கனடா செய்திகள்

இந்தோனேசியாவில் சுனாமியை தொடர்ந்த எரிமலை வெடிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

10/03/2018

இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சிதறியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தில் இதுவரை 1347 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி பலமாக தாக்கியதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த பேரழிவு காரணமாக 24 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்கள் அனைவரும், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது.

இதன் காரணமாக எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவில் ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.