New year offer 2017

கனடா செய்திகள்

ஈரான் மீதான தடை சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவு

10/03/2018

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை நீக்குமாறு சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது.

ஈரான் மீதான தடை மனிதாபிமான உதவி அல்லது உள்நாட்டு விமானப் பாதுகாப்பை பாதிக்காது என்பதை உறுதிபடுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, குறித்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்காவினால் ஈரான் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து. கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கினை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான 1955ஆம் ஆண்டு உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறுவதாக கூறி இந்தத் தடைகளை நீக்க வலியுறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த உத்தரவானது அமெரிக்காவின் தடைகளை செயல்படுத்துவதில் குறைவான நடைமுறை தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.