New year offer 2017

கனடா செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயினை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை

10/03/2018

உலகின் முதன் முறையாக, ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பபை புற்றுநோய், வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயானது ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் தடுப்பு ஊசி மருந்து பெண் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது.

கடந்த 1991-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், 2007-ம் ஆண்டு தான் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் அறிகுறி தெரியாது. பின்னர் இதன் தாக்கமானது உயிரை பறிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

எனினும், தற்போது ஆஸ்திரேலியாவில் எச்.பி.வி.னால் பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் தாக்குதல் மிகவும் குறைந்துவிட்டது. 1 லட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பபை புற்றுநோய் தாக்குகிறது.

எனவே வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.