கனடா செய்திகள்
24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
10/04/2018ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில்,தலீபான் பயங்கரவாதிகளை தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.
பாதுகாப்பு படையினரின், இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.