கனடா செய்திகள்
மியான்மர் தலைவர் சூச்சியின் கவுரவ குடியுரிமை ரத்து செய்த கனடா
10/04/2018ரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அவரின் கவுரவ குடியுரிமைப் பதவி ரத்து செய்துள்ளார்.
2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. வெகு சிலருக்கு மட்டுமே இப்பட்டத்தை கனடா அரசு திரும்ப பெற்றுள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தடுக்கத் தவறியதன் காரணமாக சூச்சிக்கு வழங்கப்பட்ட கவுர குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெற்றதாக கனடா அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், சூச்சிக்கு வழங்கிய கவுரவ குடியுரிமையை திரும்ப பெறுவதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.
இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது
இதையடுத்து, முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.