கனடா செய்திகள்
அமெரிக்கா பிச்சைக்காரர் ஒருவருக்கு கிடைத்த 20 லட்சம் பணம்
10/04/2018அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் சைரகாசை பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி டியூபிரெஸ்னே. இவர் சிறுவயதில் இருந்து வீடு இல்லாமல் இருக்கிறார்.
அதனால், ஜெர்மி அதே பகுதியில் உள்ள டன்கின் டொனால்ட் உணவகத்திற்கு சென்று இரவில் தூங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், தினமும் இவர் வருவதை பார்த்து கோபமடைந்த அந்த கடைக்காரர், அவர் மீது சுடு தண்ணீர் ஊற்றி இருக்கிறார். இந்நிகழிவு அங்கிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து,அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, வைரலாக பரவி வருகின்றது.
எனவே, இந்த காட்சியினை கண்டு கோபமடைந்த பொது மக்கள் அனைவரும் ஜெர்மிக்கு உதவ முன்வந்துள்ளனர். இதற்காக பிரச்சாரம் போல இணையத்தில் நடத்தி அந்த நபருக்கு பணம் வசூல் செய்தனர்.
இதை தொடர்ந்து, அதே பகுதியில் இருக்கும் வீடு இல்லாத நபர்களும், பிச்சைக்காரர்களும் சேர்ந்து அந்த கடைக்கு சென்று இருக்கிறார்கள்.
அந்த கடை வாசலிலேயே அவர்கள் தூங்கி போராட்டம் செய்து இருக்கிறார்கள். கடை நிர்வாகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மிக்கு பொது மக்கள் உதவியுடன் ரூ. 20 லட்சம் பணம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சுடு தண்ணீர் ஊற்றிய அந்த கடையின் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.