New year offer 2017

கனடா செய்திகள்

இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

10/04/2018

ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் இல்லையெனில் பொருளாதாரத் தடையை எதிர்கள்ளுங்கள் என்று இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசியல் தலையீடு, உக்ரைனில் தலையீடு உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதார தடை விதித்துள்ளது.

அதன் பின், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

அதன் படி, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தியா - ரஷ்யா இடையே நட்புறவு நிலவுவதால், எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியது. அதனால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில், ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிட வேண்டும், இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.