New year offer 2017

கனடா செய்திகள்

ரஷியா அதிபர் புதின் இரண்டு நாள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகை

10/04/2018

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை தரவுள்ளார்.

புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.

இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் மோடியை இன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும் ன்பது குறிபிடத்தக்கது.

இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார்.

மேலும்,டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.