New year offer 2017

கனடா செய்திகள்

பரிசில் மோசமான சாரதிகளை கண்காணிக்க 1,200 கமராக்கள்

10/05/2018

பரிசுக்குள் மிக மோசமான சாரதிகளை கண்காணிப்பதற்காக மேலதிகமாக சிறப்பு கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

பரிசில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அல்லது ஆபத்தான் முறையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் உதவியோடு பரிஸ் நகர மண்டபமும் இணைந்து பரிசுக்குள் 1,200 கமராக்களை நிறுவியுள்ளனர். videooverbalization என அழைக்கப்படும் இந்த திட்டம் முன்னர் 2013 ஆம் ஆண்டில் ஒருதடவை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருந்தது. தற்போது மிக தீவிரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது இன்று வியாழக்கிழமை ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இந்த சேவை செயற்பாட்டில் இருக்கும்.

இதற்கான 20 புதிய அதிகாரிகளை பணிக்கு நிஜமித்துள்ளனர். தடைசெய்யப்பட்ட வீதிக்குள் நுழைவது, எல்லைக்கோட்டை தாண்டி வெளியே பயணிப்பது, வளைவுகளில் மோசமாக வாகனத்தைச் செலுத்துவது என மிகச் சிறிய அளவிலான குற்றங்களுக்கும் இனி தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டப்பணத்தினை பரிஸ் காவல்துறையினரும் பரிஸ் நகர மண்டபமும் பிரித்து எடுத்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.