New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு ஆசியப் பெண் தேர்வு

10/05/2018

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருபவர் ரீட்டா பரன்வாலை என்பவர். இவர் நாட்டின் அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியானா ரீட்டா பரன்வாலை அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் பதவிக்கு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டதையடுத்து, அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் பதிவிக்கான தேர்வு நடைபெறவிருக்கிறது.