கனடா செய்திகள்
வின்ட்சருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே விஜயம் மேற்கொண்டார்
10/06/2018புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பரபரப்புமிக்க நகரான வின்ட்சருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வின்ட்சருக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை) முழுவதும் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்குள்ள தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவர் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள, Detroit ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படும் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.