New year offer 2017

கனடா செய்திகள்

இன்டர்போல் தலைவரை தடுத்துவைத்துள்ளதாக உறுதிப்படுத்தியது சீனா

10/07/2018

இன்டர்போல் தலைவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு பிரிவால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பீஜிங் குறிப்பிட்டுள்ளது.

இன்டர்போலின் தலைவர் மெங் ஹோங்வெய் (Meng Hongwei), கடந்த செப்டெம்பர் மாதம் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போனதாக அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதுகுறித்து சீனா எவ்வித தகவலையும் வெளியிடாத நிலையில், தற்போது அவரை தடுத்து வைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் பொதுப்பாதுகாப்புக்கான துணையமைச்சராக பணியாற்றிய மெங் 2016ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி 2020ஆம் ஆண்டுவரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டது. எனினும், நேற்று அவரிடமிருந்து இராஜினாமா கடிதத்தை பெற்றதாக இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.

அவரது இடத்திற்கு புதிய தலைவரை நியமிக்கும்வரை, பிரதித்தலைவராக செயற்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஜொங் யாங் பதில் தலைவராக செயற்படுவாரென இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் முக்கிய அரச அதிகாரிகள் அண்மைய காலமாக காணாமல் போகின்றனர். அந்தவகையில், அந்நாட்டில் காணாமல் போன அரச உயர் அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது.