New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர் கைது

10/08/2018

கனடாவில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய வகையில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாரியோவில் உள்ள Stewart Boulevard பகுதியில் நபர் ஒருவர், முழுவதும் தண்ணீரில் நனைந்த நிலையில் சென்று கொண்டிருந்தார்.

அவரை அழைத்து பொலிஸார் விசாரித்த போது சட்டவிரோதமாக St. Lawrence ஆற்றின் மூலம் படகில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது.

குறித்த நபரை கைது செய்து சோதனை செய்ததில் அவரிடம் அமெரிக்க கடவு அட்டையை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து அவரை குடியேற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிஸார், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.