New year offer 2017

கனடா செய்திகள்

ஐ.எஸ்.இல் இணைந்து செயற்பட்ட கனேடியர் கைது

10/09/2018

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உயர்நிலை உறுப்பினராக செயற்பட்டுவந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொந்த நாட்டிற்கு திரும்பும் முயற்சியாக குறித்த சந்தேகநபர் சிரியாவிலிருந்து தப்பித்து துருக்கிக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது குர்திஷ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான மொஹமட் அலி என்பவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துக் கொள்வதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு ரொறன்ரோவிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.

இவர், சமூக ஊடகங்களினூடாக பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், இளைஞர்களை ஐ.எஸ். இணைப்பதனையும் ஊக்குவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபருக்கு விதிக்கப்படும் தண்டணைகள் தொடர்பான எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.