New year offer 2017

கனடா செய்திகள்

கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுகிறது

10/09/2018

கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.

கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக “வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்” என்ற அமெரிக்காவின் பிரபல ஊடகத்தில் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் ப்ளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இவ் விடயம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,

கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பாதுகாப்பு தணிக்கைக்குழு வெளியிட்ட தகவல்படி மென்பொருள் தொழிநுட்ப பிழை காரணமாக கூகுள் ப்ளஸ் பயனர்கள் அவர்களது நண்பர்களுடன் பகிரும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

500,000க்கும் மேற்பட்ட கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும் இச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 மாதங்களுக்கு பயனர்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் படி அடுத்த வருடம் ஒகஸ்ட் மாதம் வரையில் கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.

2011ஆம் ஆண்டு பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.