New year offer 2017

கனடா செய்திகள்

எகிப்தில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை திடீர் தாக்குதல் 52 பேர் பலி

10/09/2018

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 52 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எகிப்தின் செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.

அவர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல்களினை மேற்கொண்டு வருவதால் அப்பகுதி முழுவதும் வன்முறைக் களமாக மாறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற இந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் , ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கடந்த சில நாட்களாக எகிப்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட துடன் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆய்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.