New year offer 2017

கனடா செய்திகள்

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை

10/10/2018

எரிபொருள் பயன்பாட்டை பூர்த்தி செய்வது குறித்து இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாக கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அன்ட்ரூ ஷியர் கருத்து தெரிவித்தார்.

குறித்த சந்திப்பானது, கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அன்ட்ரூ ஷியர் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பொது, எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டி உள்ளதாக கனேடிய கொன்சவேற்றிவ் கட்சி தலைவர் தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கும், சந்தையில் எண்ணெய் வளங்களை பெறுவதற்கும் தாம் மிகவும் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எண்ணெய் குழாய் விரிவாக்கத்திற்கான தடைகளை நீக்கி கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயு புதிய சந்தைகளை எட்டுவதற்கு கொன்சவேற்றிவ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.