New year offer 2017

கனடா செய்திகள்

அதி நவீன 48 ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கிறது சீனா

10/10/2018

ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தும் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்யவுள்ளது.

பாகிஸ்தான்-சீனா இடையே நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஆயுத தளவாட பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஸ் 400 என்ற அதிக சக்தி மிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு விங் லூங் 2 (wing loong II) என்ற இராணுவ பயன்பாட்டிற்கான நவீன ஆளில்லா விமானத்தை சீனா விற்க இருப்பதாக அந்நாட்டின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சீனா – பாகிஸ்தான் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக திகழ்கின்றன. பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஆயுத தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் சீனா திகழ்கிறது.

அந்த இரு நாடுகளும் சேர்ந்து ஜெ.எஃப். தண்டர் எனும் பெயரில் போர் விமானத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.