New year offer 2017

கனடா செய்திகள்

ரொறன்ரோ பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை

10/10/2018

ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை தொடரும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ரொறன்ரோ, யோர்க், டர்ஹம், ஹல்டன் மற்றும் பீல் பிராந்தியங்கள் மற்றும் ஹமில்டன் பெரும் பாகத்தில் கனமான மூடுபனி காலநிலை தொடர வாய்ப்புள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனத்தை செலுத்தும் போது சுமார் 100 முதல் 200 மீட்டர்

இந்த மூடுபனியானது தென்படும்.

எனவே, வீதிகளில் வாகனத்தை இயக்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், பார்வைத்திறன் குறைவாக இருக்கும் நிலையில் சாரதிகள் வாகன மின்விளக்குகளை ஒளிரச்செய்து செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.