கனடா செய்திகள்
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த சீனா
10/12/2018அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலையை எட்டி வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இது தொடர்பாக, சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் இந்தியாவுக்கு விடுத்துள்ள அழைப்பில்;
சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது.
எனவே, அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது.
சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.