New year offer 2017

கனடா செய்திகள்

வூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவர் பத்திரமாக மீட்பு

10/13/2018

கனடாவை சேர்ந்த வூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவரை பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், அமெரிக்காவை சேர்ந்த 43 மற்றும் 75 வயதான இரண்டு மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் வூட்ஸ் ஏரியின் தென்முனை பகுதியில் படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஃபாடென்ஸ் தீவுக்கு அருகே மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில், ஹெலிகாப்டர் மூலம் அவர்களை கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதில், 75-வயது நிரம்பிய மீனவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாத நிலையில் பத்திரமான மீட்கப்பட்டு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மற்றையவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.