கனடா செய்திகள்
ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரல்
10/14/2018இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளவர்கள் பொலிஸாரிடம் தமக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.