கனடா செய்திகள்
அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய 11 குழந்தைகளின் உடல்கள்
10/14/2018அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டெட்டிரோய்ட் என்ற நகரில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் கட்டிடமொன்றின் உட்கூரைகளிற்குள்ளிலிருந்து 11 குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சில மாதங்களிற்கு முன்னர் மூடப்பட்ட கட்டிடமொன்றின் கூரைகளிற்குள்ளிலிருந்தே அதிகாரிகள் குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர்.
எங்;களிற்கு கிடைத்த முறைப்பாடொன்றை தொடர்ந்தே இந்த உடல்களை கண்டுபிடித்துள்ளோம் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கன்டிரெல் இறந்தவர்களின் இறுதிநிகழ்வுகள் இடம்பெறும் இல்லத்தில் கூரைகளிற்கு நடுவில் பெட்டிக்குள்ளும் கூடையொன்றிற்குள்ளும் இந்த உடல்கள் காணப்பட்டன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் பிறக்காத சிசுக்களின் உடல்களும் காணப்பட்டதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவைமிகச்சிறியவையாக காணப்பட்டன பெட்டியொன்றிற்குள் அவற்றை மறைத்து வைத்துள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு எந்த இடத்தில் உடல்களை கண்டுபிடிக்கலாம் என்ற தகவலொன்று கிடைத்தது என குறிப்பிட்டுள்ள அதிகாரியொருவர் பல முறைப்பாடுகள் காரணமாகவே கடந்த ஏப்பிரல் மாதம் முதல் இந்த இடம்; மூடப்பட்டடிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதி சடங்குகள் இடம்பெறும் அந்த கட்டிடத்தில் உடல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என முன்னரே தகவல்கள் கிடைத்தன எனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
11 குழந்தைகளின் உடல்களில் சிலவற்றை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்ள முயல்கின்றோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.