New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் முன்னாள் அமைச்சர் டொனால்ட் மெக்டொனால்ட் காலமானார்

10/15/2018

கனடாவின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரும் சுதந்திரக்கட்சியின் நீண்டநாள் உறுப்பினருமான டொனால்ட் மெக்டொனால்ட் தன்னுடைய 86-வது வயதில் காலமானார்.

கனடாவின் றொரொன்டோ நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டொனால்ட் மெக்டொனால்ட் காலமானதாக அவருடைய குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கனடாவின் ஒட்டாவா பகுதியை சேர்ந்த டொனால்ட் மெக்டொனால்ட், 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அப்போதைய பிரதமர் பியரி ட்ரூடோவின் கீழமைக்கப்பட்ட அமைச்சரவையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்,ஒரு சிறந்த கனேடியப் பிரஜை மட்டுமன்றி அவருடைய வாழ்நாளில் அதிகமான பகுதியை நாட்டின் நலனுக்காகவே செயல்பட்டதாகவும் அவருடைய மகள் சோன்ஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.