New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு விசேட பொலிஸ் தகவல்

10/15/2018

கனேடிய அமைச்சரவையின் ரகசியத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதை அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினர் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, முதன்முதலாக கண்டறிந்து விசேட பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் வழங்கியவர் ஒரு சாதாரண அரசாங்க அலுவலகரான மெதிவ் மெச்சற் என்பவராவார்.

முன்னதாக,கடந்த 2015ஆம் ஆண்டு பல மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் கட்டும் திட்டம் பற்றிய இரகசிய தகவல்களை அந்நாட்டின் கடற்படையின் துணைத் தளபதி மார்க் நோர்மன், தனியார் நிறுவனங்களுக்கு வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து,அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டு ஆவணங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் , குறித்த வழக்கில் மார்க் நோர்மனின் வழக்கறிஞர், இக்குற்றத்தை மறுக்கும் ஆவணங்களையும் ஒட்டாவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.