கனடா செய்திகள்
பல்கேரியாவை உலுக்கிய பெண் பத்திரிகையாளர் கொலை ஐ.நா கண்டனம்
10/15/2018பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐரோப்பா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த, விக்டோரியா மாரினோவா என்ற பெண் பத்திரிகையாளர் ரூஸ் நகரின் டிவிஎன் எனும் செய்தித் தொலைக்காட்சியின் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் விக்டோரியாவில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகச் செய்திகள் வெளியிட்டுவந்தவர்.
இந்நிலையில், இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த கவலை வெளிப்பட்டது.
மேலும்,பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தேரஸும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.