கனடா செய்திகள்
ஆப்கானில் தலிபான்கள் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி
10/15/2018குறித்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின், மேற்கு பாரா மாகாணத்தின் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது.
அந்த பகுதியில்,தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் நேற்று காலை வரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 11 வீரர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 4 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, முகாமிற்கு அருகில் இருந்த இரண்டு சோதனைச் சாவடிகளையும் தீவிரவாதிகள் தாக்கியழித்ததுடன், அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களையும் எடுத்து சென்றனர்.