கனடா செய்திகள்
கனடாவில் திடீரென மாயமான வன்னி வீதி வைரலாகும் வீடியோ
10/17/2018வன்னியை சொல்லாத அரசியல்வாதியும் இல்லை! வன்னியை சொல்லாத நிகழ்வுகளும் இல்லை!! எமது நிலை எங்கேபோய் முடியுமோ! ஆனாலும் உங்களது இந்த நாட்டு நடப்பு கூத்து முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கனடா நாட்டில் மார்க்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு வன்னி தெரு என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மார்க்கம் மாநகர் கனடாவில் மாத்திரமல்ல உலகிலேயே சிறந்த மாநகராகத் திகழ்கின்றது.
இங்கு அதிகளவு தமிழ் மக்களும் தென் ஆசிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். வருடா வருடம் அதை கூறியே சில அரசியல்வாதிகள் மக்கள் ஆதரவை பெற்றுள்ளனர்.
ஆனால், பெயர் சூட்டப்பட்டு இன்று வரையும் அந்த இடத்தில் வன்னி தெருவை காண வில்லை. இது போன்ற பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் நிறைவேற்றப்பட வில்லை.
மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதற்காக புலம் பெயர் தமிழர்களின் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
நகைச் சுவையாக சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் தமிழர்கள் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.