கனடா செய்திகள்
சீனாவுடன் வர்த்தக உறவைப் பேண கனடா ஆர்வம் ஜெஸ்டின் ட்ரூடோ
10/17/2018கடந்த வருடத்திலிருந்து சீனாவுடனான வர்த்தக உறவைப் பேணுவதில் கனடிய அதிகாரிகள் அதிக கவனம் செலுத்திவருவதாக கனடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட பூகோள மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கனடிய பிரதமர் நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனா, உலக நாடுகளின் வர்த்தக மற்றும் பெருளாதார உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் மிகப் பலம் பொருந்திய இரண்டாவது நாடாக அமைந்துள்ளது. இந்நிலையில், சீனாவுடன் வர்த்தக உறவை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதும் அதனை முன்னெடுப்பதும் மிக முக்கியமானதென ஜெஸ்டின் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்ளும் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ள கனடா, சீனாவுடனான புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கனடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.