கனடா செய்திகள்
சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
10/19/2018சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உலக அளவில் ஓமன் முதலிடம் பிடித்துள்ளது.
உலக பொருளாதாரத்துறை சார்பில் 12 துறைகளை மையப்படுத்தி மொத்தம் 140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் ஓமன் முதலிடம் பிடித்துள்ளது.
உலக அளவில் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த 2018-ம் ஆண்டுக்கான சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமன் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் ஓமன் நாடானது மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அது மட்டுமின்றி அரபு நாடுகளில் சிறந்த பொலிஸ் சேவைக்கான பட்டியலில் ஓமன் 5-வது இடத்தை பிடித்துள்ளது எனவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.