New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்ற இந்திய பெண்

10/19/2018

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்றார்.

கடந்த 2015-ம் ஆண்டில் ஹூஸ்டன் நகரில் வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் கடத்தலை தடுக்க மேயர் தலைமையில் தனி குழுவினர் பிரிவில் மினால் பட்டேல் டேவிஸ் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மினால் பட்டேல் டேவிஸ், தனது துறையில் ஆற்றிய சேவைக்காக அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அவருக்கு இந்த விருதினை அளித்தார்.

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள மினால் பட்டேல் டேவிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்த நான் இந்த விருதினை பெறுவதற்கு பெருமிதம் கொள்கிறேன்.

நான் வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று முன்னர் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததுகூட இல்லை என்று

நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.