New year offer 2017

கனடா செய்திகள்

ஆஃப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்

10/20/2018

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் தலைநகர் காபுலில் பல வாக்குச் சாவடிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்றது.

இந்த தேர்தலில் சுமார் 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காபூல் நகரில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்ற போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் என அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.