New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை

10/20/2018

கனடாவில் கஞ்சாவை பயன்படுவது நடைமுறைக்கு வந்ததையடுத்து, பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்த பின்னர், அதனை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கும் சட்டம் நடப்பிற்கு

வந்துள்ளது.

இந்நிலையில், கஞ்சா தொடர்பிலான சிறு குற்றங்களில் தண்டனை பெற்றிருப்போர் பொது மன்னிப்பினை வழங்குவதை விரைவுபடுத்தவுள்ளதாக லிபரல் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, கஞ்சா போதைப் பொருளை தம்முடன் வைத்திருந்ததாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கனேடியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் கஞ்சா தொடர்பிலான குற்றச்சாட்டில் ஏறக்குறைய 55,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது