New year offer 2017

கனடா செய்திகள்

ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி

10/21/2018

பிரம்ப்டன் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக ட்ரக் ரக வாகன சாரதி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குயின் எலிசபெத் வே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே அவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பர்லிங்டனில் உள்ள குயின் எலிசபெத் வே – இல் பகுதியில் காலை 7.30 மணியளவில் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி ஒருவர் குறித்த வாகனம் நெடுஞ்சாலையில் இருந்த கொன்கிரீட் சுவரில் இடித்துக்கொண்டு மரத்தில் மோதியதை கண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி கூறியுள்ள்ளார்.

இந்நிலையில் அவரை கைது செய்த பர்லிங்டன் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் அவர் மதுபோதையில் இருந்தாரா என சோதனை செய்துள்ளனர்.

இருப்பினும் அவர் மதுபானத்தால் பாதிக்கப்படவில்லை எனவும், ஆனால் அவரது நடத்தை “அசாதாரணமானது” என்பதால் போதை மருந்து அங்கீகார சோதனை நடத்தப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் 41 வயதுடைய குறித்த சாரதி மீது போதை மருந்துகள் பாவனை மற்றும் ஆபத்தான மற்றும் பலவீனமாக வாகனம் ஓட்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.