New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு

10/21/2018

அமெரிக்காவில் சுமார் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டதற்கு அடையாளமாக க்ரீன் கார்ட் கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்காவில் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன் கார்டுக்காக காத்திருக்கிறார்கள்

கடந்த ஆண்டு சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிடத்தை 60,394 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இது அமெரிக்காவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 60 ஆயிரத்து 394 பேருக்கு அமெரிக்கா க்ரீன் கார்டு வழங்கியது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் 23 ஆயிரத்து 569 பேருக்கும், இந்தியர்களின் உறவினர்கள் 20 ஆயிரத்து 549 பேருக்கும் க்ரீன் கார்டு பெற்றுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு 64 ஆயிரத்து 116 பேருக்கும், 2015ம் ஆண்டு 64 ஆயிரத்து 687 பேருக்கும் க்ரீன் கார்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 24 லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் மெக்சிகோ நாட்டினருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.