New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

10/22/2018

கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக கனேடிய தபால் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த அறிவிப்பினை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட கனேடிய தபால் ஊழியர் சங்கத்தினர் இது தொடர்பாக கூறும்போது,

கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும்.

இந்த போராடங்களாவன கனடாவின் விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் நடைபெறும் என தொழிற்சங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், தபால் சேவைக்கான தொழில் பாதுகாப்பு, மேலதிக நேர வேலையை வலியுறுத்துவதை ஒழித்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை தபால் அலுவலகர்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.