New year offer 2017

கனடா செய்திகள்

பத்திரிக்கையாளர் கஷோகியின் உடல் மாயமாகி விட்டது சவுதி அரசு தகவல்

10/22/2018

துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் உடல் மாயமாகி விட்டதாக சவுதி அரசு தகவல் தெரிவித்துள்ளன.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் கஷோகி அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

இதையடுத்து, இவர் கடந்த 2-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். இதில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறி வந்த சவுதி அரேபிய அரசு கஷோகி கொல்லப்பட்டதாக 2 நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டது.