கனடா செய்திகள்
கனடாவில் குறைவான அளவு எரிவாயு மட்டுமே விநியோகிக்கப்படும்
10/23/2018கனடாவில் பனிக்காலத்தின் போது சாதாரணமாக விநியோகிக்கும் எரிவாயுவை விட குறைவான அளவு எரிவாயு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது,இம்மாதத்தின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் எரிவாயு விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பினை, எரிவாயு விநியோக நிறுவனமான FortisBC, வெளியிட்டுள்ளது.
அதில், எரிவாயு பற்றாக்குறை காரணமாக பனிக்காலத்தில் அப்பிராந்தியத்திற்கு சாதாரணமாக விநியோகிக்கும் எரிவாயுவை விட 20-50 சதவீதம் செறிவு குறைந்தளவு வாயுவே விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக,கடந்த ஒன்பதாம் திகதி பிரின்ஸ் ஜோர்ஸ் நகரத்திற்கு வடகிழக்கிலுள்ள வீதியில் பாரிய எரிவாயு வெடிப்பொன்று ஏற்பட்டு பாரிய நஷ்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.