New year offer 2017

கனடா செய்திகள்

9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு

10/23/2018

உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் அக்டோபர் 23-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுகாய் நகரில் நடைபெறும் விழாவில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஹாங்காங், மெக்காவ் பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த பாலத்தில் நாளை (புதன் கிழமை) முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது.

இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.