New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து

10/24/2018

அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று தரையிறக்கும் வேளையில் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாலையின் தடுப்பில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பல மைல் தூரம் வாகன நெருசலைக் கடந்து வந்த குறித்த விமானம் தரையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து,விமானிக்கு ஏற்பட்ட காயங்களில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

கீழே விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கட்டுக்கடங்கா தீயிணை அணைத்தனர்.

பழமையான விமானம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததாலேயே விபத்து நிகழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.