New year offer 2017

கனடா செய்திகள்

மெக்சிகோவில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நீடிப்பு

10/24/2018

மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் கரை கடந்ததையடுத்து, அந்த பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

பசிபிக் கடலில் நிலைகொண்ட குறித்த வில்லா புயலானது, நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு கரை பகுதியை தாக்கியது.

இதையடுத்து, சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் பகுதியில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து, கனமழை இன்றும் நீட்டித்து வருவதால் அந்த பகுதிக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, இந்த மாத துவக்கத்தில் அமெரிக்காவை தாக்கிய மைக்கேல் புயலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.