New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய தலைவர் புட்டின் சந்திப்பு உறுதி

10/24/2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் ஆகியோர் எதிர்வரும் மாதம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பானது, வரும் நவம்பர் மாதம் 11 -ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடக்கவுள்ள முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவேந்தலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டு ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினுடனான அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின் சந்திப்பிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

மேலும், டிரம்ப்- ரஷ்ய தலைவர் புட்டின் சந்திப்பானது இரண்டாவது அமெரிக்க-ரஷ்ய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது