New year offer 2017

கனடா செய்திகள்

சவூதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் ஜமாலின் உடல் பாகங்கள்

10/24/2018

பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபிய மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் இந்த செயல்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த தகவலை துருக்கி எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.