New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவில் 6 சிறுவர்களின் உயிரை பறித்த எடனோ வைரஸ்

10/25/2018

அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தின் பகுதிகளில் எடனோ வைரஸ் தாக்கத்தினால் ஆறு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த வைரஸ் தாக்குதலானது, நியூஜேர்சியின் ஹஸ்கெல் நகரத்திலுள்ள சீர்திருத்த மையமொன்றில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் பரவியுள்ளதாகஅதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குலுக்கு, அந்த மையத்தின் ஆறு சிறுவர்கள் பலியாகியுள்ள நிலையில், மேலும் 12 சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறுவர்களுக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ள பட்டு வரும் நிலையில், மற்ற நோயாளிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த எடனோ வைரஸின் அறிகுறிகளாவன, இலேசான காய்ச்சலும் தடிமனும் இதன் முதல் அறிகுறிகளாக தெரிவிக்கப்படுள்ளது. இருப்பினும், இந்த வைரஸானது சிறுவர்களையே அதிகமாகத் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.