கனடா செய்திகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் கவலையடையும் அமெரிக்கா
10/27/2018இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் சீனாவும் இலங்கையின் செல்வாக்கை பெறுவதற்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன, மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தன என தெரிவித்துள்ளனர்.
நியுயோர்க் டைம்ஸ் மகிந்த ராஜபக்ச இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிற்காக சீனாவிடமிருந்து பெருமளவு கடனை பெற்றார் இந்த திட்டங்களில் சில எந்த வித பொருளாதார நன்மையையும் கொண்டிராதவை என குறிப்பிட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தை கடுமையாக விமர்சித்திருந்ததுடன் அதற்கான உதாரணமாக இலங்கையை சுட்டிக்காட்டியிருந்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் கடற்படையின் தளமாக மாறும் என அவர் குறிப்பிட்டிருந்தார் எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா குறிப்பிட்ட துறைமுகத்தை இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என மேற்குல அதிகாரிகள் அச்சம்கொண்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.