New year offer 2017

கனடா செய்திகள்

கனடா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

10/29/2018

கனடாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Saskatchewan மாகாணத்தின் Regina நகரில் நேற்று (சனிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் வேகமாக மோட்டார் வாகனத்தில் வந்தநபர் ஒருவர் விபத்தில் சிக்கியதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறந்தவரின் விபரம் மற்றும் விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.