New year offer 2017

கனடா செய்திகள்

189 பேருடன் சென்ற விமானம் திடீர் விபத்து கடலில் மிதக்கும் விமான பாகங்கள் மற்றும் எரிபொருள்கள்

10/29/2018

ஜாவா கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் பாகங்கள் மற்றும் எரிவாயு கடலில் மிதக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு 6.20 மணிக்கு புறப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது. புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 189 பேர் பயணம் செய்தனர்.

நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிகிறது. அந்த கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 189 பேரின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் உதிரிபாகங்களும், அதன் எரிப்பொருளும் கடலில் மிதக்கின்றது. இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

விமானம் காணாமல் போனதற்கு முன்பாக 5000 அடி உயரத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3,650 அடி உயரத்தில் பறந்த போது விமானத்தின் தொடர்பு பதிவாகியுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளையும் ஊழியர்களையும் மீட்க கப்பல் மூலம் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.